Advertisment

கொடைக்கானலில் தொடர் மழையால் சாலையில் விழுந்த மரங்கள்; போக்குவரத்தை சீர் செய்யும் ஊழியர்கள்

Kodaikanal work clearingtrees fell road due  continuous rain  intensive

மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்ததாழ்வு மண்டலம் காரணமாக தென்தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் இரவு முதல் விடிய விடிய தொடர் மழை பெய்தது வருகிறது.

Advertisment

இதன் காரணமாக கொடைக்கானல் வத்தலகுண்டு சாலையில் இன்று அதிகாலை வாழை கிரி என்ற இடத்தில் சாலையோரம் அடுத்தடுத்துஇருந்த இரண்டு மரங்கள் சாலையில் விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. தகவல் அறிந்துவந்த வத்தலகுண்டு நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றி ஒரு மணி நேரத்தில் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்நிலையில், தொடர் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டிருப்பதால் கொடைக்கானல் மலைச்சாலையில் வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் பயணம் செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisment

rain kodaikanal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe