Advertisment

'கொடைக்கானல் ட்ரிப்...'- சிறுவர்களின் அதிர்ச்சி செயல்

'Kodaikanal Trip...'- Children's shock act

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவர்கள் திடீரென காணாமல் போன நிலையில் அவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றது தெரியவந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவர்கள் 4 பேர் வழக்கம் போல டியூசனுக்கு சென்று இருந்தனர். டியூசனுக்கு சென்ற நான்கு சிறுவர்களும் இரவு 8 மணி ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். இருப்பினும் சிறுவர்கள் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர்கள் பயத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரை விசாரித்த திருமுல்லைவாயில் காவல்நிலைய போலீசார் சிறுவர்கள் டியூஷன் பயின்று வரும் பகுதிக்கு அருகேயுள்ள வீடுகள் மற்றும் கடைகளின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் நான்கு சிறுவர்களும் ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது. குறிப்பிட்ட ஆட்டோ எண்ணை கைப்பற்றி விசாரணை செய்ததில் அந்த ஆட்டோ கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்றது தெரிந்தது. பின்னர் ஆட்டோவிலிருந்து இறங்கிய சிறுவர்கள் அங்கிருந்து கொடைக்கானல் செல்லும் பேருந்தில் ஏறி உள்ளனர். பேருந்து வத்தலகுண்டு நோக்கிச் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் நான்கு சிறுவர்களையும் வத்தலகுண்டு சென்று மீட்டு உள்ளனர்.

Advertisment

சிறுவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட நான்கு சிறுவர்களும் கொடைக்கானலை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அதற்காக திட்டமிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக வீட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கொடைக்கானல் போகலாம் என திட்டமிட்டுள்ளனர். பெற்றோர்கள் விடமாட்டார்கள் என்பதால் அவர்களிடம் சொல்லாமலேயே இவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு கொடைக்கானல் செல்ல முயன்றது தெரியவந்தது.

Chennai kodaikanal
இதையும் படியுங்கள்
Subscribe