
கொடைக்கானலில் சுற்றுலா வருபவர்களிடம் பொது இடங்களில் திருநங்கைகள் சிலர் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டுவதோடு, சுற்றலா பயணி ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடைக்காலம் நெருங்கிவரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் கொடைக்கானல் ஏரிக்கரை சாலையில் திருநங்கைகள் சிலர் சுற்றுலா பயணி ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி இருந்தது. அதில் சாலையோரம் நடந்துவரும் சுற்றுலாப் பயணியிடம் மூன்று திருநங்கைகள் பணம் கேட்டுள்ளனர். அப்பொழுது பணம் தர மறுத்ததால் சுற்றுலா பயணிக்கும் திருநங்கைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கைகலப்பானது. உடனே அங்கிருந்த சிலர் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி நடப்பதாக வேதனை தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், பணம் தரவில்லை என்றால் சாபம் விடுவது, முகம் சுளிக்கும் வகையில் பொது இடங்களில் நடந்து கொள்வது என சில திருநங்கைகள் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர். இதற்கு போலீசார்தான் தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)