தனியார் பட்டா நிலங்களை மறித்து கொடைக்கானல் வானிலை ஆய்வுமையத்தில் சுற்றுச் சுவர் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில்திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பதிலளித்திட உயர் நீதிமன்றக் கிளைஉத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானல், அப்சர்வேட்டரி புதுக்காடையைச் சேர்ந்த சாமுவேல் என்பவர்தாக்கல் செய்திருந்த மனுவில்,‘எங்களுக்குச் சொந்தமான 1.55 ஏக்கர் நிலம்அப்சர்வேட்டரி பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் நாங்கள் வீடு கட்டியுள்ளோம்.மேலும், இந்த நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறோம். இதுபோல், மேலும்சிலருடைய பட்டா நிலமும் அங்குள்ளது. எங்கள் நிலத்திற்குச் செல்லும் வழியில் சுமார் 21 அடியை ஆக்கிரமித்து மறித்து கொடைக்கானல் வானிலை ஆய்வுமையம் சுற்றுச் சுவர் எழுப்பி வருகிறது. இதனால் நாங்கள் எங்கள் வீட்டிற்குச்செல்ல வழியின்றியும், எங்கள் நிலத்தில் விளையும் பொருட்களைக் கொண்டுசெல்லவும் இயலாமல் தவித்து வருகிறோம். எங்கள் நிலத்திற்குச் செல்வதற்குவேறு பாதைகள் இல்லை. எனவே இந்த சுற்றுச்சுவர் கட்டும் பணியை தடுத்துநிறுத்துவதுடன், எங்கள் நிலத்திற்குச் செல்லும் வழியில் உள்ள 21 அடி பாதையைஒதுக்கித் தரவும் உத்தரவிட வேண்டும்.’ குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் இந்த மனு இன்று விசாரணைக்குவந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து திண்டுக்கல் மாவட்டஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கினை நவம்பர் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.