Skip to main content

தொகுதியை அறிவோம்... திருவண்ணாமலை!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், செங்கம் ( தனி ), திருப்பத்தூர், ஜோலார்பேட்டை என 6 தொகுதிகள் உள்ளது. இதில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், திருப்பத்தூர் என 4 தொகுதிகளில் திமுக எம்.எல்.ஏக்களும், கீழ்பென்னாத்தூர், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

 

election

 

சட்டமன்றத்தில் மட்டும்மல்ல இந்த பாராளுமன்ற தொகுதி திமுக வரலாற்றில் மிக முக்கியமான தொகுதி. திமுக என்கிற கட்சி தொடங்கப்பட்டு திமுக எதிர்கொண்ட முதல் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு எம்.பிக்கள் திமுக சார்பில் வெற்றி பெற்றனர். அதில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தர்மலிங்கமும் ஒருவர். அன்று முதல் தற்போதைய தேர்தல் வரை திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது.

 

 

1971 தேர்தலில் திருவண்ணாமலை தொகுதி என்பது திருப்பத்தூர் தொகுதியாக பெயர் மாற்றம்மடைந்தது. அப்போது நடந்த தேர்தலில் திமுக சின்னராஜ், 1977ல் திமுக சி.என்.விஸ்வநாதன், 1980ல் திமுக முருகையன், 1984, 1989, 1991ல் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் மாறி மாறி கூட்டணி வைத்து காங்கிரஸ் ஜெயமோகன் வெற்றி பெற்றார். 1996, 1998, 1999, 2004, 2009 என தொடர்ச்சியாக 5 முறை திமுகவை சேர்ந்த வேணுகோபால் வெற்றி பெற்றார். 2014ல் அதிமுக வனரோஜா வெற்றி பெற்றார். திமுக தொடங்கியது முதல் இப்போது வரை திமுகவின் தொகுதிகளில் வெற்றி தொகுதி என்பது கட்சி தலைமையின் நம்பிக்கை.

 

 

இந்த தொகுதியின் பெரும்பான்மை சமூகமாக வன்னியர், தலித், கவுண்டர்கள், அதற்கடுத்தயிடத்தில் முதலியார், கிருஸ்த்துவர்கள், இஸ்லாமியர்கள் என்கிற வரிசையில் உள்ளனர்.

 

இந்த தொகுதியில் 2014ல் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 13,31,724 வாக்குகள். இந்த 2019 தேர்தலில் கடந்த ஜனவரி மாத கணக்கின்படி, 14,54,657 வாக்குகள் உள்ளன. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 14 ஆயிரம் பேர் அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

 

இந்த தொகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் மட்டும்மே. நிலத்தடி நீரை மட்டும்மே விவசாயம் நடக்கும் பகுதியிது. ஒரு குறிப்பிட்ட பகுதி விவசாய நிலங்களுக்கு மட்டும் சாத்தனூர் அணை நீர் பாசனத்துக்கு கிடைக்கும். விவசாயம் இல்லாத காலங்களில் இப்பகுதி மக்கள், பெங்களுரூ, மாண்டியா, ஷிவமோகா, சென்னை போன்ற இடங்களுக்கு விவசாய வேலைக்கும், கொத்தனார் வேலைக்கும் செல்கின்றனர். இதனால் கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதியாகவும் இந்த தொகுதியுள்ளது.

 

 

பிரபலமான அண்ணாமலையார் கோயில் இந்த தொகுதிக்குள் தான் வருகிறது. மாதத்துக்கு 20 லட்சம் பக்தர்களை திருவண்ணாமலை நகரம் காண்கிறது. இதன் மூலம் ஓரளவு சுற்றுலா வளர்ச்சி அடைந்து தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. மற்றப்படி இந்த தொகுதியில் விவசாயமே பிரதானம்.

 

தொகுதியின் தேவைகள்……..

 

1.   வேலூர் மாவட்டத்தில் இருந்து தனியாக பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஏலகிரி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது திருப்பத்தூர், ஜோலர்பேட்டை, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம், ஏலகிரி பகுதி மக்களின் 35 ஆண்டுகால கோரிக்கை. அந்த கோரிக்கையை ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது வேட்பாளர்கள் வாக்குறுதி தருகிறார்கள், வெற்றி பெற்றவுடன் மறந்துவிடுகிறார்கள்.

 

2.   திண்டிவனத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, செங்கம், சிங்காரப்பேட்டை வழியாக ஜோலார்பேட்டைக்கு இரயில்பாதை அமைக்க வேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கை. அந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு பணிகள் தொடங்கி, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தும், பணிகள் தொடங்கவில்லை.

 

3.   திண்டிவனம் டூ கிருஷ்ணகிரி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்ற பணிகள் நடைபெற்று அவை பாதியில் நிற்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக மக்கள், கட்சிகள் பல போராட்டங்கள் நடத்தியும் மத்திய – மாநில அரசுகள் கண்டுக்கொள்ளவில்லை.

 

4.   திருப்பத்தூர் பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.

 

5.   செங்கம் பகுதியில் அரசின் சார்பில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் பிரதான கோரிக்கைகளில் முக்கியமானவையாகும்.

 

6.   சாத்தனூர் அணையை தூர்வார வேண்டும், மத்திய அரசின் நிதியுதவியோடு பெரிய தளமாக மாற்ற முயற்சிகள் செய்ய வேண்டும்.

 

7.   திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை பிரதான சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.

8. எட்டுவழி சாலையை புறக்கணிக்க வேண்டும்.

தற்போது இந்த தொகுதியில் திமுக சார்பில் அண்ணாதுரை என்பவரும், அதிமுகவில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி என்பவரும் களத்தில் நிற்கிறார்கள். இவர்களில் மேற்கண்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றுவேன் என வாக்குறுதி தருகிறேன் என்பவருக்கு இந்த தொகுதி சாதகமாக இருக்கும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.