தந்தை பெரியாரின்49 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் இதனைத்தொடர்ந்துதலைவர்கள் பலரும் தந்தை பெரியாருக்குநினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் திருவுருவச் சிலைக்கு திராவிடர்கழகத் தலைவர் வீரமணி, திமுகமுதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமானகே.என்.நேரு ஆகியோர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் எம்.எல்.ஏக்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார்திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.