Skip to main content

மனைவியுடன் பழகியதால் ஆத்திரம் - நண்பனின் தலையை துண்டித்தவர் சரண்

Published on 18/06/2018 | Edited on 18/06/2018


 

Knife


கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ராஜசூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் கோசிமின் (வயது 33). இவர் காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் ஜவுளி கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி தெய்வலட்சுமி(28). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

 

 

 

கோசிமின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரத்தம் தோய்ந்த கத்தியுடன் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்த போலீசார் ரத்தம் தோய்ந்த கத்தியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். கோசிமினை என்னவென்று விசாரித்தனர். அப்போது நண்பனின் தலையை துண்டித்ததாக சொல்லியவுடன் மேலும் அதிர்ச்சியடைந்தனர். 
 

கோசிமின் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்,
 

நான் சொந்தமாக கார் வைத்துள்ளேன். நான் ஜவுளிக்கடை வைத்திருப்பதால் அடிக்கடி வெளியே போக முடியாது. அதற்காக பகுதிநேர டிரைவராக சுந்தரபாண்டியன் என்பவரை வேலைக்கு நியமித்தேன். கடந்த 4 ஆண்டுகளாக அவர் வேலை பார்த்தார். மேலும் எனது ஜவுளிகடைக்கு தேவையான பொருட்களையும் அவ்வப்போது வாங்கி வந்து தருவார். இதன் மூலம் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழக தொடங்கினோம். வீட்டுக்கு தேவையான பொருள்களையும் வாங்க சொன்னால் வாங்கி வருவார். இதனால் எனது வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்து செல்வார்.

 

 

 

இந்த நிலையில் எனது மனைவி தற்போது கரூரில் உள்ள அவருடைய தாய் வீட்டுக்கு காரில் சென்றார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்த போது, அவர் யாருடனோ போனில் பேசி வந்தார். இதனை பார்த்த உறவினர்கள் என் மனைவியை விசாரித்துள்ளனர். அவர் மழுப்பலாக பேசி சமாளித்துள்ளார். பின்னர் உறவினர்கள் எனக்கு இதுகுறித்து தெரியப்படுத்தினர்.

 

 

 

பின்னர் இதுபற்றி விசாரித்த போது சுந்தரபாண்டியன் தான் போனில் பேசியது தெரியவந்தது. அவர்களுக்கிடையே கள்ளதொடர்பு நீண்ட நாட்களாக இருப்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. அதிர்ச்சியடைந்தேன். என் மனைவியை கண்டித்தேன். தொடர்ந்து சுந்தரபாண்டியனையும் கண்டித்தேன். ஆனால் சுந்தரபாண்டியன் கேட்கவில்லை. தொடர்ந்து பேசி வந்தார். இதையடுத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, திட்டம் தீட்டி கொலை செய்தேன் என கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

விபத்தில் உயிரிழந்த உயிர் நண்பன்; அதே இடத்தில் இளைஞர் எடுத்த பரிதாப முடிவு

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
A friend who lose in live in an accident; A pathetic decision taken by the youth at the same place

உடன் வந்த உயிர் நண்பன் விபத்தில் உயிரிழந்ததால் மனமுடைந்த இளைஞர் அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர்-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ளது நல்கிடா என்ற பகுதி. அங்கு சாலை ஓரத்திலிருந்த மரத்தில் 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அருகில் இருந்த ராஜ்கட் காவல் நிலையத்திற்கு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை கீழே இறக்கி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த இளைஞர் ஜபூவா மாவட்டத்தைச் சேர்ந்த கண்டிசிங் என தெரிய வந்தது. அவருடைய மொபைல் போனை எடுத்து ஆராய்ந்தபோது தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி இருந்தார்.

அந்த வீடியோவில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி குறிப்பிட்டிருந்தார். அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டி சிங் அவருடைய நண்பர் நௌசிங் உடன் இந்தூர்-அகமதாபாத் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்ப்புறம் வந்த இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நௌசிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன்னுடைய உயர் நண்பன் விபத்தில் உயிரிழந்ததைத் தாங்க முடியாத கண்டி சிங் அதே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.