மதுரையில் பட்டா கத்தியை காட்டி டாஸ்மாக் கடையில் புகுந்து கொள்ளையடித்த நபர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நேற்று இரவு டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் கணேஷ்குமார் கடையை மூடிவிட்டு கிளம்பு முயன்ற பொழுது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்தியால் தாக்கி கடை மீண்டும் திறக்க வைத்தனர். பின்னர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில் பெட்டிகளில் உயர் ரக மது பாட்டில் பெட்டிகளை எடுத்துக் கொண்டதோடு கல்லாவில் இருந்த ஒரு லட்சம் ரூபாயையும் எடுத்துக்கொண்டு சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.