Advertisment

கே.என்.ராமஜெயத்தின் நினைவு தினம் அனுசரிப்பு; அமைச்சர்கள் பங்கேற்பு

kn ramajayam eleventh year anniversary ministers participated 

Advertisment

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும்திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே.என். ராமஜெயத்தின் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அமைச்சர் கே.என். நேருவின் இல்லத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் ராமஜெயம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கே.என். நேருவின் மகனும்தொழிலதிபருமான கே.என்.அருண் நேரு, சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகர மேயர் அன்பழகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், வழக்கறிஞர் பாஸ்கர், மண்டலக் குழுத்தலைவர்கள், பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ராமஜெயம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Chennai ramajayam trichy
இதையும் படியுங்கள்
Subscribe