Advertisment

கே.என்.நேருவின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

K.N. Nehru's brother admitted to hospital

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரனுக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர்அண்மையில் சோதனை செய்திருந்தனர். அவரது வங்கிக் கணக்கில் அதிக பரிவர்த்தனை காணப்பட்டதால், அதிகாரிகள் இந்த சோதனையைத் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில் சென்னையில் உள்ள அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சி.ஐ.டி. காலனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

Advertisment

இதையடுத்து சென்னை ஆர்.ஏ. புரத்தில் இருந்த கே.என். ரவிச்சந்திரனை (அவரது இல்லத்தில் இருந்து) அமலாக்கத்துறை அதிகாரிகள்காரில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்குஅழைத்து சென்று விசாரணை நடத்தி இருந்தனர். இன்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராக வேண்டிய நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேசான நெஞ்சு வலி காரணமாக கே.என்.ரவிச்சந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment
Enforcement Department kn nehru
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe