முத்துராமலிங்க தேவர் சிலைக்கு கே.என். நேரு மரியாதை 

KN Nehru respects the statue of Muthuramalinga Thevar

திருச்சியில் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe