KN Nehru participate in trichy farmers support rally

Advertisment

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தி.மு.கமுதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில், விவசாயிகள், தொழிலாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள்உள்ளிட்டோரும், மக்கள் அதிகாரம், தொழிலாளர் முன்னேற்றக் கழகம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், 500க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். இதனால், இப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்துப் பாதித்தது.

பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன. பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

Advertisment

திருச்சி மத்திய பேருந்து நிலையம், திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், சோமரசம்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.