Klims of 'Kangwa' released

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisment

3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த வருடத்தொடக்கத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது. பின்பு மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்குப் பிறந்தநாள் விருந்தாக வெளியாகும் எனப்படக்குழு போஸ்டர் மூலம் தெரிவித்திருந்தது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/oBlxdr1KbEA.jpg?itok=8Q27OrLZ","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Advertisment