Advertisment

“திருநீறு பூசி நாங்க ஏமாத்திருவோம்; உங்களால முடியாது!” -மோடி குறித்து கே.கே.எஸ்.எஸ்.ஆர். எச்சரிக்கை!

கேலியும் கிண்டலும் கலந்து யதார்த்தமாகப் பேசுவதில் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கெல்லாம் முன்னோடி கே.கே.எஸ்.எஸ்.ஆர். விருதுநகர் மாவட்ட திமுக மா.செ.வான அவர், ராஜபாளையம் – பசும்பொன் தேவர் மண்டபத்தில் நடந்த தென்காசி தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கொஞ்சம் ‘அப்டி-இப்டி’ பேசிவிட, அது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வினரை ரொம்பவே உசுப்பேற்றியிருக்கிறது. என்ன பேசினார் தெரியுமா?

Advertisment

k

“இங்கே சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சேர்ந்தவங்கள்லாம் இருக்கீங்க. எச்சரிக்கையா இருங்க. நமக்குள்ள பிரச்சனை இல்ல. நாங்க (இந்து) திருநீறுகூட பூசி ஏமாத்திருவோம். முஸ்லீம், கிறிஸ்தவர்கள் ஜாக்கிரதையா இருக்கணும். இந்த நாட்டுல நீங்க இருக்கணும்னா, மோடிய ஓட ஓட விரட்ட வேண்டிய வேலை எங்களவிட உங்களுக்குத்தான் ஜாஸ்தி. நாங்கள்லாம் விபூதி பூசி ஏமாத்திருவோம். நீங்க ஏமாற்ற முடியாது. நீங்க தொப்பி போட்டிருப்பீங்க. கண்டுபிடிச்சிருவாங்க. மோடியை விரட்ட வேண்டிய நிலை உங்களுக்கு.” என்று பேசியிருக்கிறார் அண்ணாச்சி.

Advertisment

ஆபத்தான பேச்சாக அல்லவா இருக்கிறது!

viruthunagar kkssr
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe