த

சாலையில் நின்றுநேரலை செய்துகொண்டிருந்த தென் கொரிய பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தென் கொரியாவைச் சேர்ந்தவர் பிரபல யூடியூபர் மையோசி. இவர் அந்நாட்டில் அதிகபாலோயர்களைக்கொண்ட பிரபலம். இவர் ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அங்குள்ள புகழ்பெற்ற பகுதிகளைப் பற்றி செய்தி சேகரித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிடுவார்.

Advertisment

அந்த வகையில் நேற்று மும்பையில் கர் பகுதியில் நேரலை செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் அவரை தங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா என்று இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே அந்த இளைஞர்களில் ஒருவர் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். இது அனைத்தும் அவருடைய சேனலில் லைவ் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரிடம் அத்துமீறிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.