Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கரோனா உறுதியானது!

KIRSHNAGIRI DISTRICT CORONAVIRUS CASE CONFORMED

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களுக்கான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

குறிப்பாகத்தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று (01/05/2020) மாலை 06.00 மணி நிலவரப்படி தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,312 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் கரோனா பரவல் தொடங்கியது முதல் நேற்று வரை கரோனா இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்த நிலையில், தற்போது அந்த மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வேப்பனஹள்ளி அருகே நல்லூரைச் சேர்ந்த 67 வயதான முதியவருக்கு கரோனா உறுதியானது. முதியவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தினர் 8 பேருக்கும்சோதனை செய்யப்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தின் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி தொற்று காரணமாக ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது.

http://onelink.to/nknapp

கரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஆந்திராவில் பணியாற்றிவிட்டுத்திரும்பி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

positive case coronavirus Krishnagiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe