பயிற்சி முடித்தபோது பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசிய தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி கிரண் ஸ்ருதி திருவண்ணாமலை மாவட்ட ஏ.எஸ்.பி. ஆனார்.
ஐ.பி.எஸ். பயிற்சி முடித்த கிரண் ஸ்ருதி உள்ளிட்ட ஏழு ஏ.எஸ்.பி.க்களுக்கு பணி ஒதுக்கியது தமிழக அரசு. அதன்படி, வேலூர் ஏ.எஸ்.பி- அல்பர்ட் ஜான், வள்ளியூர் ஏ.எஸ்.பி- எஸ்.எஸ். மீனா, செங்கல்பட்டு ஏ.எஸ்.பி- ஆதர்ஸ் பச்சேரா, நெய்வேலி ஏ.எஸ்.பி- பி.எஸ்.பிரியா, ராமேஸ்வரம் ஏ.எஸ்.பி- தீபக் சிவச், திருச்செந்தூர் ஏ.எஸ்.பி- ஹர்ஷ் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.