Advertisment

மீண்டும் ஆய்வில் இறங்கிய கிரண்பேடி!

புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்ற போட்டி முதலமைச்சர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இருந்து வருகின்றது. முதலமைச்சர் ‘துணை நிலை ஆளுநர் ஆய்வு செல்லக்கூடாது. அதிகாரிகளை அழைத்து செல்லக்கூடாது’ என்று வலியுறுத்தி வருகின்றார். இதுகுறித்து வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது வருகின்றது.

Advertisment

 kiran pedi Back to the study

இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் நடைமுறை காரணமாக ஆய்வுக்கு செல்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி எந்தவித தகவலும் இன்றி திடீரென இன்று தனது வார இறுதி நாள் ஆய்வை தொடங்கினர். ராஜ்நிவாஸில் இருந்து சைக்கிள் மூலம் சென்ற கிரண்பேடி ஆம்பூர் சாலையில் உள்ள பெரியவாய்க்கால், கதிர்காமம் பகுதியில் உள்ள கனகன் ஏரியை தனது ராஜ் நிவாஸ் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

 kiran pedi Back to the study

Advertisment

நேற்றுமுதலமைச்சர் நாராயணசாமி தலைமை செயலகத்தில் ஆய்வு செய்த நிலையில் ஆளுநர் கிரண்பேடி தனது ஆய்வு பணிகளை மேற்கொண்டது புதுச்செரியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

kiran pedi Puducherry v. narayanasamy
இதையும் படியுங்கள்
Subscribe