kiran bedi

புதுச்சேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வணிகர் சங்கம் உதவியோடு நேரு வீதி, ரெங்கபிள்ளை வீதியில் உள்ள கடைகளுக்கு குப்பை தொட்டிகள் வழங்கும் பணியை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடங்கி வைத்தார்.

Advertisment

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் கிரண்பேடி, "சபரிமலை ஐயப்பன் கோவிளுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், நூறாண்டு காலமாக இருந்து வந்த மனிதர்களுக்குள்ளான தவறான வேறுபாடுகள் அகற்றுப்பட்டுள்ளது.

Advertisment

ஆண், பெண் இருவருமே மனிதர்கள்தான் இருவருக்கும் பாகுபாடு காட்டக்கூடாது. இந்த தீர்ப்பின் மூலம் இருவருக்கும் சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் " பெண்கள் தங்களுக்கான பாலியல் உறவை தேர்ந்தெடுடுப்பது குறித்து உச்சநீதின்றம் வழங்கிய தீர்ப்பு என்பது, சமுதாயத்தில் ஆண், பெண் இருவருக்கும் சம உரிமை உள்ளது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.

Advertisment