Advertisment

கூடங்குளத்தில் அணு கழிவு மையம் அமைக்க கூடாது - 4 ஊராட்சியில்  கிராம சபை கூட்டத்தில் தீா்மானம்

கூடங்குளத்தில் அணு கழிவு மையம் அமைக்க கூடாது என்று 4 ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

ர்

தமிழகத்தில் மே முதல் நாள் நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் தோ்தல் நடத்தை விதிமுறையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 425 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில் கூடங்குளத்தை சுற்றியுள்ள ஊராட்சிகளில் கூடங்குளத்தில் அணுகழிவு மையம் அமைக்க கூடாது என்று மக்கள் தீா்மானம் நிறைவேற்ற கோாியதால் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

Advertisment

rr

கூடங்குளத்தில் இடிந்தகரை மக்களின் தொடா் போராட்டங்களை மீறி தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கபட்டது. அதில் முதல் அணு உலையின் மின் உற்பத்தியை 2016 ஆகஸ்ட் 10-ம் தேதி பிரதமா் மோடி மற்றும் அப்போதைய தமிழக முதலமைச்சா் ஜெயலலிதாவும் நாட்டுக்கு அா்ப்பணித்தனா். அதோடு அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட உதயகுமாா், முகிலன், யேசுராஜன், புஷ்பராயன் உள்ளிட்டோா் மீது 100-க்கு மேற்பட்ட வழக்குகள் போலிசரால் போடப்பட்டது.

r

இந்த நிலையில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பயன்பாட்டில் இருக்கும் அணு உலையில் இருந்து கிடைக்கும் அணு கழிவுகளை வைக்க கூடங்குளத்தில் அணு கழிவு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மக்கள் எதிா்ப்பு தொிவித்து வருகின்றனா். அதற்கு மத்திய அரசும் மாநில அரசும் வாய் மூடியே இருக்கிறது. மத்திய அரசு கூடங்குளத்தில் அணு கழிவு மையம் அமைத்து தீருவோம் என்ற நிலைபாட்டில் இருக்கிறது.

இந்த நிலையில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் அணு கழிவு மையம் அமைப்பதற்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற அந்த பகுதி மக்கள் எதிா்ப்பு தொிவித்து கோஷங்கள் எழுப்பினாா்கள் இதற்கு அதிகாாிகள் அந்த மக்களின் கோாிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

இந்த நிலையில் கூடங்குளம், செட்டிக்குளம், வடக்கன்குளம், ஆணைக்குளம் ஆகிய 4 ஊராட்சிகளிலும் மக்கள் கொந்தளிப்பையடுத்து கூடங்குளத்தில் அணு கழிவு மையம் அமைக்க கூடாது என்று கிராம சபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

kirama saba
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe