குவைத் மன்னர் மறைவுக்கு, தமிழக அரசின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், அனைத்துத்துறை தலைவர்கள், டி.ஜி.பி.,காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், 'குவைத் மன்னர் ஷேக் சபாஅல் அகமது மறைவுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும். நாளை (04/10/2020) அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும். நாளை அரசு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.