நவம்பர் ஒன்றில் மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பா? - தமிழ்நாடு அரசு அரசாணை! 

 Kindergarten and nursery schools to open on November 1? -Government of Tamil Nadu!

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடுஅரசு அனுமதி அளித்திருந்தது. முன்னதாக 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பள்ளிகளைத் திறக்கும்போது எவ்வாறு பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதோ, அதேபோல் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புவரை பள்ளிகளைத் திறக்கும்போதும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மழலையர், நர்சரி பள்ளிகளை நவம்பர் ஒன்று அன்று திறக்கலாமா என்ற கேள்வி இருந்த நிலையில், மழலையர், நர்சரி பள்ளிகளைத் திறக்கும் முடிவு தற்போதைக்கு இல்லை எனதமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மழலையர், எல்கேஜி, யூகேஜிக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

baby education TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe