Kilpakkam government hospital fire incident

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 தளங்கள் கொண்ட பிரதான கட்டடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகம் முழுவதிலும் இருந்தும் நாள்தோறும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேர் வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதோடு சுமார் 200 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இத்தகைய சூழலில் தான் இந்த கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இன்று (17.08.2024) திடிரெனெ தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக பத்திரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து கீழ்ப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து காரணமாக அங்குள்ள நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

Advertisment

இந்த தீ விபத்திற்கான காரணமாக மின் கசிவு அல்லது குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திடிரெனெ மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.