Skip to main content

சிறப்பு விமானத்தில் கடத்திவரப்பட்ட கிலோ கணக்கான தங்கம்..!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

Kilograms of gold smuggled in a special plane ..!
                                          மாதிரி படம் 


சார்ஜாவில் இருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.


சார்ஜாவில் இருந்து சிறப்பு விமானங்கள் திருச்சிக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்று (22.06.2021) ஏர் இந்தியா விமானம் திருச்சிக்கு வந்து சேர்ந்தது. அதில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது உடைமைகளுக்குள் மறைத்துவைத்துக் கொண்டுவரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.


இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 6 பேரை கைது செய்ததோடு, அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் கொண்டுவரப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய்வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

 


திருச்சி அண்டங்கொண்டான் பகுதியில் உள்ள கல்லூரி மாணவி மலர்விழியை முரளி என்ற இளைஞர் கத்தியால்  குத்தி கொலை செய்தார்.   மலர்விழியை கத்தியால் குத்திக்கொன்ற முரளியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.  இதில் முரளி படுகாயம் அடைந்தார்.

 

மலர்விழியின் உறவினர்தான் முரளி என்பதும், முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்துள்ளதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

m

 

Next Story

திருச்சி: ஆளுநர் ஆய்வுக்கு திமுகவினர் எதிர்ப்பு

Published on 21/02/2018 | Edited on 21/02/2018


 

Banwarilal Purohit

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திருச்சி சென்றுள்ளார். சுற்றுலா மாளிகையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியில் முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் திரண்டிருந்த திமுகவினர் கருப்புக்கொடிகளை உயர்த்தி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஸ்ரீரங்கம் ஆலயம், உச்சிபிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆளுநர் மாலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம், கல் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆய்வு செய்ய இருக்கிறார். மேலும் சுற்றுலா மாளிகையில் பொதுமக்களை சந்தித்து மனு பெறவும் உள்ளார். இது மாநில உரிமைகளுக்கு எதிரான செயல். ஆளுநநரின் ஆய்வுப் பணி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அவமதிப்பது போல் உள்ளது என்று கூறி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.