Advertisment

தி.நகரில் கைப்பற்றப்பட்ட கிலோகணக்கான காலாவதியான உணவுகள்!

தமிழ்நாட்டில் சமீப காலமாக சில மாவட்டங்களில் குளிர்பானம் அருந்திய குழந்தைகள் உடல் உபாதை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதேபோல், உணவகத்தில் சாப்பிட்டு சிலருக்கு உடல் உபாதை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வப்பொழுது சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisment

அந்தவகையில் இன்று, சென்னை, தி.நகர், ரெங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதாசிவம் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது கெட்டுப்போன உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

சுமார் 50 கிலோ அளவில் கெட்டுப்போன உணவு பொருட்களையும் 100க்கும் மேற்பட்ட குளிர்பானங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இவற்றைப் பறிமுதல் செய்யப்பட்ட கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். அதுமட்டுமின்றி அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

food T nagar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe