Advertisment

கள்ளக்காதலால் அரங்கேறும் கொலைகள்

Advertisment

கள்ளக் காதலால் அறங்கேறும் கொலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவது தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இரண்டு நாட்களில் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளது.

சம்பவம்:1

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியை சேர்ந்தவர் வீரையன் மகன் விக்ரம், சினிமாத் துறையில் மேக்கப் மேனாக வேலைபார்த்து வருகிறார். அவரது சகோதரி அனுராதா, அவரை கும்பகோணத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவரை பார்க்க விக்ரமன் அடிக்கடி சென்றுவந்தபோது, அனுராதாவீட்டிற்கு பக்கத்து வீட்டுபெண்ணான நீலாவதியை விரும்பியிருக்கிறார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

ஒரு நாள் நீலாவதி குளித்துக்கொண்டிருந்தபோது விக்ரமன் மறைந்திருந்து படம்பிடித்திருக்கிறான். அந்த படத்தை நீலாவதியிடம் காட்டி நான் என்னென்ன சொல்கிறேனோ அதையெல்லாம் நீ செய்யனும், எங்க எப்போது கூப்பிடுகிறேனோ அங்கெல்லாம் வரனும், அப்படி செய்யலன்னா உன்னோடகுளியல் வீடியோவை உலகமே பார்க்கும் என மிரட்டி அடிக்கடி உல்லாசத்தை அனுபவித்திருக்கிறான்.

ஒரு கட்டத்தில் மனமுடைந்த நீலாவதி, உறவுக்கார பையனான ராகுலிடம் படம்பிடித்து ஆட்டம் காட்டுவது குறித்து கூறியிருக்கிறார். ''சரி விடு நான் சொல்ற மாதிரி நீ செய்’’ என ராகுல் கூறியபடியே விக்ரமனை வேளாங்கண்ணிக்கு வரவழைத்து கடலில் கட்டி அனைத்து குளித்திருக்கின்றனர். அங்கு ஓரமாக கத்தியோடு நின்றுகொண்டிருந்த ராகுல் சரமாரியாக விக்ரமனை குத்தி படுகொலை செய்தனர். அங்கு குளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் நீலாவதியையும் ராகுலையும் பிடித்து வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம்:2

புதுக்கோட்டை பொன்னமராவதியை அடுத்துள்ள சித்தூரை சேர்ந்த சன்னாசியும், கருப்பையாவும் அண்ணன் தம்பிகள்.கருப்பையா மாமனார் வீட்டிலேயே இருந்து வருகிறார். இருவரும் மரம் வெட்டும் தொழிலை செய்து வருகின்றனர். தொழிலுக்கு சேர்ந்தே போவார்கள், தொழிலுக்கு போவதற்காக அண்ணன் வீட்டிற்கு வந்து போகும்போது அண்ணன் சன்னாசியின் மனைவியும் அண்ணியுமான விஜயாவிற்கும் இடையே கசமுசா ஏற்பட்டிருக்கிறது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதை கண்ணால் கண்ட சன்னாசி விஜயாவையும், கருப்பையாவையும் கண்டித்திருக்கிறார். இதுவரை வெளியே தெரியாத விவகாரம் தெரிந்துவிட்டது. அவரை சும்மாவிட்டா எல்லாருக்கும் தெரிஞ்சுடும், அதோட நம்ம உறவிற்கும் இடையூறு என்று தீர்த்துக்கட்ட முடிவெடுத்து மதுகுடித்துக்கொண்டிருந்த சமயத்தில் வெட்டி படுகொலை செய்தனர். இருவரையும் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சம்பவம்:3

கள்ளக் காதலுக்கு கண்ணில்லை என்பார்கள் அது இந்த சம்பவம் உண்மையாக்கியுள்ளது.

சிவகாசி பராசக்தி காலணியை சேர்ந்தவர் வள்ளி, திருமணமாகி கணவனை பிரிந்து தனது சகோதரர்களான அய்யப்பன்,முருகனோடு வாழ்ந்து வருகிறார். வள்ளி அங்குள்ள அச்சகத்தில் வேலைப்பார்த்து வருகிறார். அச்சகத்தின் உரிமையாளரான செல்வத்திற்கும் வள்ளிக்கும் தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக் காதலாக மாறியது.

இது வள்ளியின் தம்பியான முருகனுக்கு தெரிந்து. ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளோடு இருக்கும் செல்வத்தோடு தொடர்பு வைத்து கொள்வது சரியில்லை என எச்சரித்துள்ளான். அதை பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத வள்ளியை தொடர்ந்து பலமுறை கண்டித்திருக்கிறான் முருகன்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்தநிலையில் தனது கள்ள உறவிற்கு தம்பியே இடையூராக இருப்பதை பொருத்துக் கொள்ள முடியாத வள்ளி முருகனை தீர்த்துக் கட்ட, திட்டமிட்டார். முருகனுக்கு பிரியமான கோழிக்கறியை சமைத்து அதில் குருனை மருந்தை கலந்து வைத்துவிட்டு அருகில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டாள் வள்ளி.வழக்கத்தைப் போல் குடிப்பதற்காக வீட்டில் இருந்த கோழிக் கறியை எடுத்துக்கொண்டு தம்பி, அய்யப்பனோடு நண்ன்பர்களை அழைத்து கொண்டு சாப்பிட்டிருக்கின்றனர். அதில் சிறுவன் கவுதம், முகமது இப்ராஹிம், கணேசன்,முருகன் உள்ளிட்ட நான்கு பேர் இறந்துள்ளனர் , மற்றொரு தம்பியான ஐயப்பன் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

கள்ளக்காதல் விவகாரம் குறித்து சமுக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “ஒரு காலத்தில் கள்ளக்காதலால் கொலைகள் அடிக்கடி நடக்கும். அதற்கான தொலை தொடர்பு குறைவு, அவர்களின் தொடர்பு வெளியில் தெரியவந்து கொலைகள் அறங்கேறும், ஆனால் தற்போது குறைந்திருந்தது, மீண்டும் துவங்கியுள்ளது, அதற்காக கள்ள தொடர்பு வைத்திருப்பவர்களின் என்னிக்கை குறைந்துவிட்டது என்பது அர்த்தம் இல்லை. தொலை தொடர்பு அவர்களுக்கு வசதியாகிவிட்டது, அதையும் மீறி நடப்பது தான் இதுமாதிரியான கொலைகள். மூன்று சம்பவங்களிலும் கொலையாளிகள் என்ன சாதித்து விட்டார்கள். சிறைக்கு சென்றதும் சமூகத்தில் அசிங்கப்பட்டதும் தான் மிச்சம்’’ என்கிறார்.

Improper romantic affair
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe