நண்பர் மனைவியுடன் கூடா நட்பு வைத்திருந்தவரை பலமுறை கண்டித்தும் கேட்காததால் அவரை கொலை செய்து கொடைக்கானல் மலையில் இருந்து 1500 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டதாக கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் - வசந்தா தம்பதியினர் மகன் 34 வயதுடைய மணிகண்டன். திருமணம் ஆகாத இவர் டீக்கடையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 23ஆம் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இவரது தாயார் வசந்தா பல இடங்களில் மணிகண்டனை தேடியும் அவரைப் பற்றி சரியான தகவல் கிடைக்கவில்லை.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
இதனைத் தொடர்ந்து, தனது மகன் மணிகண்டன் காணவில்லை. பல இடங்களில் விசாரித்து பார்த்துவிட்டேன். யாரும் தெரியவில்லை என்கிறார்கள் என்று ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில்வசந்தா புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால், இன்ஸ்பெக்டர் ரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்ட போலீசார், மணிகண்டன் செல்போன் வைத்திருந்தாரா, அவரது செல்போன் எண்ணை பெற்று, மணிகண்டனின் செல்போனில் பேசிய நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்தனர். குறிப்பாக மணிகண்டன் காணாமல் போன அன்று யாருடன் பேசினார் என்பதையும் ஆய்வு செய்தபோது, ஜெய்ஹிந்த்புரம் பாரதியார்புரத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் பேசியிருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கூடாநட்பு விவகாரத்தில்தான் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
கைதான சீனிவாசன், என்னுடைய நண்பர் சரவணன். மதுரை நேரு நகரை சேர்ந்த அவர், ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். மேலும் தனக்கு தெரிந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். சரவணனுடைய மனைவி வனிதாவுக்கும், மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இது தொடர்பாக மணிகண்டனையும், வனிதாவையும் சரவணன் கண்டித்தார். இருப்பினும் அவர்களது தொடர்பு நீடித்தது.
இதனை சரவணன் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். மேலும் மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்ட சரவணன், அதற்காக என்னிடம் உதவி கேட்டார். நான் என்னுடைய நண்பர்களான மதுரை கீரைத்துரையை சேர்ந்த சபரி, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த மகாராஜன் ஆகியோரிடம் இதனை தெரிவித்தேன். அவர்கள் இருவரின் உதவியோடு மணிகண்டனை கொலை செய்ய நானும், சரவணனும் முடிவு செய்தோம். அதற்கான திட்டங்களை தீட்டினோம்.
கொடைக்கானலுக்கு ஜாலியாக சென்று வரலாம் என்று மணிகண்டனை அழைத்தோம். இதனை மறுக்காத மணிகண்டன் வருவதாக கூறியதையடுத்து, கடந்த 24-ந்தேதி மதுரையில் இருந்து மணிகண்டனுடன், நாங்கள் 4 பேரும் ஒரு காரில் கொடைக்கானல் சென்றோம். கொடைக்கானல் பாம்பார்புரம் நீர்வீழ்ச்சிக்கு சென்ற நாங்கள் அனைவரும் மதுபானம் குடித்தோம்.
குறிப்பிட்ட தூரம் வரை காரில் சென்ற நாங்கள், அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் நடந்து சென்றோம். திடீரென நாங்கள் 4 பேரும் சேர்ந்து மணிகண்டனின் வாயை பொத்தி கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தோம். பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக 1,500 அடி பள்ளத்துக்குள் உடலை வீசி விட்டோம்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">
அதன்பிறகு காரில் கொடைக்கானல் பஸ் நிலையம் வந்த நாங்கள், அதே பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினோம். காலையில் எழுந்த நான், அறையில் தங்கியிருந்த சரவணன், சபரி, மகாராஜன் ஆகியோரை காணவில்லை. பின்னர் நானும் கொடைக்கானலில் அறையை காலி செய்துவிட்டு மதுரை வந்து விட்டேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர் என்று சீனிவாசன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே சீனிவாசனை கொடைக்கானலுக்கு போலீசார் அழைத்து வந்தனர். மணிகண்டனின் உடல் வீசப்பட்ட இடத்தை அவர் அடையாளம் காட்டினார். இதனையடுத்து உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சரவணன், சபரி, மகாராஜன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.