விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ளது பெரும்பகை. இந்த கிராமத்தை சேர்ந்த விதவைப் பெண்ணான 43 வயது குட்டியம்மாவுக்கும் அவருக்கு மருமகன் முறை கொண்ட தேவேந்திரனுக்கும் கள்ளத் தொடர்பு இருந்தது ஊருக்குள் அரசல் புரசலாகத் தெரியும். கடந்த 18-ஆம் தேதி ஆடு மேய்க்கச் சென்ற குட்டியம்மா மாலையில் வீடு திரும்பவில்லை.

Advertisment

 killed the lovers and took the video;memory card Source

தேவேந்திரனின் வீட்டிற்குச் சென்ற குட்டியம்மாவின் மகன் கார்த்தி ( வயது 28) தன்னுடைய அம்மா மாயமானது குறித்து, தேவேந்திரனின் மனைவியிடம் கேட்டிருக்கிறார். தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய தேவேந்திரனின் மனைவி, “வேண்டுமானால் கூழாங்கல் மலைப் பகுதியில் போய் தேடிப்பார்“ என்று ' பொடி' வைத்துப் பேசியிருக்கிறார். உடனே, கூழாங்கல் மலைப் பகுதியில் தேடிப்பார்த்தபோது குட்டியம்மாளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தேவேந்திரன் மீது செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் கார்த்தி.

 killed the lovers and took the video;memory card Source

Advertisment

போலீஸார் நடத்திய விசாரணையின்போது "குட்டியம்மாவுடனான தொடர்பால் என் மனைவி பிரிந்து சென்றாள். அதனால்தான், குட்டியம்மாவை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்தேன். இரண்டு வருடங்களுக்கு முன், சுமதியுடனான தொடர்பால், இதேபோல் என் மனைவி கோபித்துக் கொண்டாள். அவளுடனான தொடர்பையும் துண்டித்தேன். ஆனால், என் மனைவி நம்பவில்லை. அதனால் அவளையும் மலைப் பகுதிக்குக் கூட்டிச் சென்று இதே மாதிரி கொலை செய்தேன். அதை வீடியோவாகவும் எடுத்தேன். அந்த வீடியோ உள்ள மெமரி கார்டு என் மனைவியிடம் உள்ளது.” என்று கூறி அதிர வைத்திருக்கிறான் தேவேந்திரன்.

‘தேவேந்திரன் ஒரு மாதிரியான ஆள்தான்.. விழுப்புரம் மாவட்டம் – செஞ்சியைச் சுற்றியிருக்கும் கிராமங்களில் திருவிழா நடக்கும்போதெல்லாம் போய்விடுவான். பெண்களுக்குக் குறிவைப்பான்.’ எனச் சொல்லும் அந்த கிராமத்தினர், ‘இன்னும் எத்தனை பேரைக் கொலை செய்தானோ?’ என்கிறார்கள் திகிலுடன்.