/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mukilan 3.jpg)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முகிலனின் பங்கு மிக முக்கியமாக பேசப்பட்டது. அலங்காநல்லூரில் அந்த கடைசி நாளில் இவரை மட்டும் குறிவைத்து குண்டுகட்டாக தூக்கி வேனில் வைத்து எவ்வளவு அடித்து சித்தரவதை செய்யமுடியுமோ அவ்வளவு செய்ய அவர் உடல்ரிதியாக மிக பாதிப்படைய வேறு வழியின்றி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட நாம் அங்கு சென்று போலிஸ் காவலை மீறி அவரிடம் பேட்டி எடுத்து வெளியிட்டோம்.
அதற்கு பின் அடுத்தடுத்து தமிழகத்தில் மக்கள் பிரச்சனையான ஹைட்ரோஹார்பன் ,நெடுவாசல் ஸ்டர்லைட் பிரச்சனை, மணற்கொள்ளை, மீத்தேன் என அனைத்து மக்கள் போராட்டங்களிலும் முகிலனே முதலாக நிற்பார். இவரை போன்று தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய சர்வதேச அரசியலை பாமரர்களுக்கு கொண்டுசென்றதில் முக்கியமானவர் திருமுருகன் காந்தி இவர் இனரீதியான மொழிக்கு எதிரான பாஜக வின் போக்கையும் தமிழக மக்களுக்கு எதிரான நீட் போன்றவற்றையும் மக்களுக்கு பாதகமான ஒவ்வொரு திட்டத்தையும் விளக்கி சமூக ஊடகங்களிலும் போராட்டங்களின் மூலமாகவும் அதன் உண்மையான நோக்கங்களை வெளிகொண்டுவருவதில் பெரிதும் முனைப்பாக இருவரும் இருந்தார்கள்.
இதில் முகிலன் தூத்துக்குடி போராட்டத்தின் போது இவரை கைது செய்த போலிஸார் பின்பு ஜாமீனில் விடுதலையாகி அடுத்தநாள் இவரை ஆறுபேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றதாக தகவல் வர அது மீடியாவில் பரவ உடனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அதை கண்டிக்க பின்பு சென்ற வருடம் அக்டோபர் 18 அன்று இவர்மேல் பல்வேறு வழக்குகள் போட்டு முகிலனை கைது செய்தனர். 374ல் சிறைவாசத்திற்கு பிறகு செப்டம்பர் 26 புதன் அன்று மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை ஆன முகிலன் நம்மிடம் பேசினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mukilan 2.jpg)
அப்போது அவர், ‘’நான் பல்வேறு மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்து வந்தாலும் இந்தமுறை என்னை பாளையங்கோட்டை தனிமை சிறையில் போட்டு அருகில் சாக்கடையை ஓடவிட்டு ஆயிரக்கணக்கான கொசுக்கடியினால் என் போர்வையே காலையில் இரத்தகறை படிந்து இருக்கும்அளவுக்கு வைத்திருந்ததை பார்த்துவைகோ என்னை வந்து பார்க்கும் போது மிகவும் வருத்தபட்டார்கள். அதற்கு பிறகு வள்ளியூர் கோர்ட்டில் நீதிபதியிடம் என் சட்டையை கழட்டி காட்டினேன். நானும் ஒவ்வொருமுறை வாய்தாவிற்கு போகும்போதெல்லாம் நீதிமன்றத்தில் காவல்துறை செய்யும் கொடுமைகளை சொல்லாமல் இல்லை. அவர்களும் பலமுறை போலிசாரை கண்டித்துள்ளனர். வேறு சிறைக்கு மாற்ற உத்தரவிட்டனர். உடனே மதுரை சிறைக்கு இரவு 12 மணிக்கு மாற்றினார்கள்.
இங்கு வந்த பிறகு அதைவிட கொடுமை யாரிடமும் பேசகூடாது என்று தனிமை சிறைக்கு கொண்டு சென்று நான் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் வயிற்றுவலியால் அவதிப்படுவேன். உடல் மெலிய தொடங்கியது . பதினொரு முறை கொல்ல முயற்சித்தார்கள். இதையெல்லாம் உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் சொல்லி மன்றாடினேன். இதைக்கேட்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிறைக்கே வந்து ஆய்வு செய்தது இந்திய வரலாற்றிலேயே முதல் முறை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mukilan1.jpg)
இப்போது இருக்கும் அரசு எடப்பாடி அரசு அல்ல பாஜக அரசு அவர்கள் தமிழகத்தில் என்னை போன்றவர்களை கைது செய்து உடல்ரீதியாக பலம் இழக்க செய்து அவர்களுக்கு மனரீதியாகவும் தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து அவர்களை முழுவதுமாக முடக்குவது என்ற அஜண்டாவை வைத்திருக்கிறார்கள்.
தற்போதுகூட எனது வழக்கறிஞர்கள் என்னிடம் தோழர் திருமுருகன் காந்திக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதாகவும் வயிற்றுபோக்கு போன்றவற்றால் அவதிப்படுவதாகவும் அவரது வழக்கறிஞர்கள் சொன்னதாக சொன்னார்கள் மற்றும் பத்திரிக்கை மற்றும் சமூக ஊடகங்களில் வந்தவண்ணம் இருக்கிறது. இது ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தலின் படி மக்களுக்கு உண்மை தன்மையை எடுத்துரைக்கும் எழுத்தாளர்கள் மற்றும் திருமுருகன் காந்தி என்னை போன்றவர்களை மனரீதியாக தொடர்ந்து காயப்படுத்துவது சிறையில் வைத்து சாப்பாட்டில் உடலை பாதிக்கக் கூடிய மருந்துகளை கலந்து கொடுத்து அவர்களை பலவீனப்படுத்துவது என்று புதிய முறைகளை பின்பற்ற தொடங்கிருக்கிறார்கள்.
இது பாசிச ஆட்சியாளர்களால் தான் இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுவார்கள். மராட்டியம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் கல்புர்க்கி போன்றவர்களை சுடுவது இல்லையென்றால் அவர்களை தீவிரவாதிகள் நக்சலைட்டுகள் என்று சிறையில் தள்ளி அவர்களை இதுபோல் சித்திரவதை செய்வது என்ற பாசிச மனப்பாங்கை இந்த எடபாடி அரசு மூலம் தன் செயல்பாட்டை செயல்படுத்த தொடங்கிருக்கிறது. மத்திய பாஜக பாசிச அரசு சமீபத்தில் மாணவி சோபியா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பது நிதர்சனம். இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள் நடக்கப் போகிறதோ என்ன கலவரம் நடக்கபோகிறதோ தெரியவில்லை’’ என்று முடித்தார் முகிலன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)