Skip to main content

கீழக்கரையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் தேவிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.   இலங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி இந்து பிரமுகர் முருகன், முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், இந்து முன்னணி மாநில செயலாளர் முனியசாமி ஆகியோர் கொலை வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றபட்ட பிறகு இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் கீழக்கரை பகுதியில் அதிகாலை 3 மணிமுதல் விசாரணை செய்து வந்தனர்.

 

k


இதுபற்றி நாம் கேட்டபோது, அதிகாரி திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணை நடைபெறுகிறது என மலுப்பலான பதில் கூறினார்.  மேலும் பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் அவர்களை விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர்.

 

  மற்றொரு அதிகாரியிடம் ரகசியமாக கேட்டபோது அவர் வீரமரணம் என்ற வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி அதில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதுபோல் சங்கேத வார்த்தைகளை உருவாக்கி பேசி வருவதாகவும், இது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.   இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த சோதனையில் லேப்டாப், பென்டிரைவ், மொபைல்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

தீபாவளி வசூல்... லஞ்ச ஒழிப்பு துறை சோதனை... கணக்கில் வராத பணம் பறிமுதல்

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் தீபாவளி பண்டிகையொட்டி, அங்கு பணியாற்றும் பலர் வசூலில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார்கள் சென்றது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புதுறை டி.எஸ்.பி. உன்னிகிருஷ்ணன் தலைமையில் திடீரென கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு அதிகாரிகள் வந்தனர். 
 

அந்த அலுவலகத்தின் அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு 8 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து நாற்பத்தி ஏழாயிரம் ரூபாய் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றியதாகவும், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.


 


 

 

 

Next Story

வீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019
ramanathapuram kilakarai



இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா பள்ளி முன்பாக ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலால் வீர மரணமடைந்த தமிழக வீரர்களான அரியலூர் சிவசந்திரன், தூத்துக்குடி சுப்பிரமணியன் உட்பட 44 இராணுவ வீரர்களுக்கு கீழக்கரையில் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்த்தான் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
 

மேலும் வீரவணக்கம், வீரவணக்கம் கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் இதுபோன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என கோஷங்களை எழுப்பி அஞ்சலி செலுத்தினர்.
 

இதில் மஹ்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், இஞ்ஜினியர் கபீர், எஸ்.கே.வி சுஐபு,கி ழக்குதெரு ஜமாத் உதவித் தலைவர் அஜிகர், லெப்பை தம்பி, மக்கள் டீம் காதர், யாசின், ராசிக், சுபியான், ஜீவா உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.