Skip to main content

கீழக்கரையில் அசத்தும் பெண் தி.மு.க. நகர மன்றத் தலைவர்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

kilakarai has very good woman Chehanas Abida leaderMunicipal Council

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் 58 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு திமுகவை சேர்ந்த பெண் செகனாஸ் ஆபிதா நகர மன்றத் தலைவராக உள்ளார். இவருக்கு உறுதுணையாக அவரது சகோதரரும் திமுக மாணவர் அணி அமைப்பாளருமான இபதிஹார் ஹசன் உள்ளார். இவர் சேர்மனாக பொறுப்பேற்றதிலிருந்து கீழக்கரையில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை ஓரளவு குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்சமயம் கீழக்கரை பகுதிக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.211 கோடி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் முயற்சியால் கிடைக்கப்பெற்றது.

 

இதையடுத்து கீழக்கரை புதிய பேருந்து நிலையம் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புது கட்டடம் கட்டுவது, மீன் கடை பகுதியில் உள்ள கட்டடங்கள் மோசமாக உள்ளதால் இந்த கட்டடங்களைப் புதிதாகக் கட்டுவது, துணை சுகாதார நிலையம் அமைக்க, நகராட்சி புதிய கட்டடம் அமைக்க எனத் தீவிரமாகச் செயல்பட்டு நிதிகளைக் கேட்டு வருகிறார். மேலும், தினந்தோறும் காலை 10 மணிக்கு நகராட்சி அலுவலகம் வந்துவிட்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்க ஆரம்பித்து விடுவார். தற்சமயம் மக்களின் குறைகளை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் நகராட்சி வளாகத்திலேயே மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தி அதற்கு உடனடியாக தீர்வு கண்டு அசத்தி வருகிறார் கீழக்கரை நகர மன்றத் தலைவர் செகனாஸ் ஆபிதா.

 

இது பற்றி திமுக நகர மன்றத் தலைவரிடம் கேட்டபோது, “தமிழக முதல்வர், நாங்கள் கேட்கும் நிதிகளை உடனடியாக ஒதுக்கித் தருகிறார். எங்களுக்கு மிகவும் உறுதுணையாக எங்கள் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உள்ளதால் நாங்கள் நிறைய மக்கள் பணிகளை எந்த தொய்வுமின்றி செய்ய முடிகிறது. இன்னும் நிறைய செய்ய வேண்டும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக நிர்வாகி ஆலோசனைக் கூட்டம்; திமுக அரசைக் கண்டித்து தீர்மானம்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Resolution condemning DMK government in AIADMK executive meeting

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு அமைப்பு செயலாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.சி பரமசிவம், மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், அணி நிர்வாகிகள் பாலாஜி, ஞானசேகர், கலிலுல் ரகுமான், ஜோசப் ஜெரால்டு, வக்கீல் ராஜேந்திரன்,வெங்கட் பிரபு,ஜான் எட்வர்ட்,சகாபுதீன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ். பூபதி, சுரேஷ் குப்தா, ரோஜர், ராஜேந்திரன், ஏர்போர்ட் விஜி , எம்.ஆர்.ஆர்.முஸ்தபா உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 52க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தைக் கண்டித்தும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் 24ஆம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திரளானோர் பங்கேற்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Next Story

விஷச் சாராயம் குறித்து எதிர்க்கட்சிகளின் புகாருக்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் மறுப்பு (படங்கள்)

Published on 22/06/2024 | Edited on 22/06/2024

 

தமிழ்நாடு சட்டசபை பேரவைக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று (22-06-24) கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் இந்த சம்பவத்திற்கு  தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு தொடர்பு இருக்கிறது என்றும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

அதே போல், முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பா.ம.க தலைவர்கள் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ மற்றும் சங்கராபுரம் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட இரண்டு எம்.எல்.ஏக்களான ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன் செய்தியாளர்களைச் சந்தித்து எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து பேசினர்.