Kids joined in school at kallakurichi

திருக்கோவிலூர் வட்டாரம் மாடாம்பூண்டி நரிக்குறவர் குடியிருப்புப் பகுதியில் பள்ளிச் செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.கோ.கிருஷ்ணப்பிரியா, மாடாம்பூண்டி நடுநிலைப் பள்ளியில்,ஆய்வு மேற்கொண்டார். திருக்கோவிலூர் மாவட்டக் கல்வி அலுவலர் திரு.ம.கலைச்செல்வன், பள்ளித் துணை ஆய்வாளர் திரு.பிரபாகரன், வட்டாரக் கல்வி அலுவலர் திரு.இரா.முரளி கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisment

அப்போது, மாடாம்பூண்டி நரிக்குறவர் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும், ஐந்து வயது நிறைந்த மாணவர்கள் அஜய், சரவணன் ஆகியோர் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். மோனீஷ்வரி, சந்தோஷ், காயத்திரி ஆகியோர் ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.

மாடாம்பூண்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.வெ.புஷ்பவல்லி, ஆசிரியர்கள் செ.அழகுராணி, மு.சாந்தி, சீ.வெங்கடேஷ், கு.சிவப்பிரகாசம், நா.அமுதா, சூ. ரேஷ்மி மற்றும் தன்னார்வல ஆசிரியர் கு.ஜெயா ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisment

பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடைகள், பாடநூல்கள், குறிப்பேடுகள் மற்றும் புத்தகப் பைகள் ஆகியவற்றை முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கினார்.