Kidnapping

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் 35 வயதான விஜய் ராஜஷ் குமார். சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு 30 வயதில் ரஞ்சனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவியும், இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகளும் உள்ளனர்.

ரஞ்சனி சென்னை தரமணியில் உள்ள சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு சட்டம் படித்து வந்தார். அதே வகுப்பில் நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த 30 வயதுடைய ரித்தீஷ் என்பவர் படித்து வந்தார்.

ஒரே வகுப்பில் படித்ததால் நட்பாக பழகியுள்ளனர். நாளடைவில் ரஞ்சனி மீது ரித்தீசுக்கு காதல் மலர்ந்தது. ரஞ்சனி திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் ரித்தீஷ் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் அவர்களுடைய பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

Advertisment

இரண்டு ஆண்டு காலமாக நீடித்து வந்த இவர்களின் கள்ளக்காதல் விவகாரம், ரஞ்சனியின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் அவர் ரஞ்சனியை கண்டித்தார். ஆனால் இதை கண்டுகொள்ளாத ரஞ்சனி, ரித்தீசுடன் தொடர்ந்து தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விசயம் தனது பெற்றோருக்கு தெரியவந்ததால் கோபம் அடைந்த விஜய்ராஜேஷ் குமார், மனைவி ரஞ்சனியை சட்டக் கல்லூரிக்கு செல்ல வேண்டாம் என்று தடுத்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்தது.

வீட்டை விட்டே வெளியே போகக்கூடாது என்று சொல்வதா என கணவரிடம் கோவித்துக்கொண்ட ரஞ்சனி, தனது பெற்றோர் வீடான தஞ்சை பர்மா காலனிக்கு இரண்டு குழந்தைகளுடன் சென்றார்.

Advertisment

தஞ்சைக்கு சென்ற விஜய்ராஜேஷ் குமார், மனைவியிடம் சென்னைக்கு வரும்படி பேசியுள்ளார். ஆனால் ரஞ்சனி மறுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இருந்த ரஞ்சனியை காணவில்லை. உறவினர்கள் வீடுகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் ரஞ்சனியை தேடிப் பார்த்த அவரது கணவர் விஜய்ராஜேஷ் குமார் தஞ்சை மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதில, தனது மனைவி ரஞ்சனியை முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரித்தீஷ் கடத்தி சென்று விட்டார். அவரை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.