/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aeqeqeq.jpg)
திருச்சி மணப்பாறையில் தனியார் அரிசி ஆலைக்கு சொந்தமான TN60 S2998 என்ற எண்ணுடைய புதிய லாரி ஒன்று கடத்தப்பட்டது. தகவல் அறிந்த மணிகண்டம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் சாலையின் நடுவே தடுப்புகளை வைத்து, லாரியை மடக்கிப்பிடிக்க முயன்றார். தடுப்புகளை உடைத்து விட்டு லாரியை வேகமாக மர்ம நபர்ஒருவர் ஓட்டி சென்றார்.
காவல் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர், உள்ளூர்காரர்எனமூன்று பேரூம், மூன்று கார்களில் அந்த லாரியைத்சினிமா காட்சிபோல்ஜேஸிங்செய்து துரத்தி 60 கிலோ மீட்டருக்குஅந்த லாரியைதுரத்திதிருச்சி அரியமங்கலம் பால்பண்ணை அருகே கார்களைக்கொண்டு மோதி மடக்கிப் பிடித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TRU86T868.jpg)
லாரியை கடத்தி வந்தவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதில் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் லாரியைக் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.லாரியை கடத்திய அந்த மர்ம நபர்திருச்சி அரியமங்கலம், காட்டூர் பகுதியைச் சேர்ந்த பிச்சுமணி என்பது தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)