Advertisment

சென்னையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு - கடத்தல்காரர்களை அதிரடியாக கைது செய்த போலீசார்

Kidnapping

Advertisment

சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் 8வது தெருவைச் சேர்ந்த கம்யூட்டர் உதிரிபாகம் விற்பனை செய்யும் தொழில் அதிபர் மதன் சாய்ராம். நேற்று இரவு அண்ணாநகர் டி. பிளாக்கில் இருக்கும் தனது நிறுவனத்தில் இருந்து வெளியே வரும்போது அடையாளம் தெரியாத சிலர் கத்தி முனையில் கடத்தியதாக அண்ணா நகர் போலீசாருக்கு புகார் வந்தது.

அதன் பேரில் ஆய்வாளர் சரவணன் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் அம்பத்தூர் வாவின் அருகே சாலையில் சைக்கிளில் சென்ற ஒருவர் மீது கார் மோதியது. இதில் சைக்கிளில் சென்றவர் காயமடைந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் காரை மடக்கி பிடித்தனர். அப்போது கடத்தல்காரர்களிடம் பிடிபட்டிருந்த மதன் சாய்ராம், காரில் இருந்து பொதுமக்களிடம் தஞ்சமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் தொழிலதிபரை மீட்டனர்.கடத்தல்காரர்களான அயனாவரம் நம்மாழ்வார் தெருவைச் சேர்ந்த ஜானகி ராமன்,பட்டாளத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் மற்றும் பத்மநாபன் மற்றும் ஓட்டேரியைச் சேர்ந்த இம்ரான் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Kidnapping
இதையும் படியுங்கள்
Subscribe