Skip to main content

சேலத்தில் பட்டப்பகலில் 3 வயது குழந்தை கடத்தல்... சிலமணி நேரத்தில் மீட்பு

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

சேலத்தில் 3 வயது ஆண் குழந்தை காணாமல் போன நிலையில் நடுரோட்டில் விடப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் மீட்டனர்.

The kidnapped 3 year old child in Salem ...

 

சேலம் சத்திரத்தை சேர்ந்தவர் பாலாஜி. அவருக்கு 3 வயதில் யோகேஸ்வரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இன்று காலை வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த குழந்தை யோகேஷ் காணாமல் போனதை அடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தேடியும் கிடைக்கவில்லை. இதனால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

The kidnapped 3 year old child in Salem ...

 

 

The kidnapped 3 year old child in Salem ...

 

இந்தபுகாரின் அடிப்படையில் அந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சியை சோதித்தபோது ஸ்கூட்டியில் வந்த இரண்டு பெண்கள் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை சேலத்தான்பட்டியில் நடுரோட்டில் விட்டுவிட்டு சென்றதால் அழுந்து கொண்டிருப்பதாக தகவல் வர போலீசார் சென்று விசாரித்ததில் அந்த குழந்தை காணாமல் போன சத்திரத்தை சேர்ந்த பாலாஜியின்  குழந்தை யோகேஷ் என தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் யார் அந்த பெண்கள் எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'கோவையில் திருடர்கள்... விருதுநகரில் விஐபிக்கள்...' - பகீர் கிளப்பும் முகமூடி கொள்ளை கும்பல்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
 'We are the owner... we are the thief...'- Club is also a masked bandit

கோவையில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் முகமூடி அணிந்து கொண்டு 4 நபர்கள் நடமாடும் சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறை இது தொடர்பாக முழு விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் இந்த கொள்ளை கும்பல் தமிழகம் முழுவதும் ரயில் தண்டவாளங்களை ஒட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்தது தெரிய வந்துள்ளது.

கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொள்ளையில் ஈடுபட்டுள்ள இந்த கும்பல் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவை மாநகரில் மட்டும் 18 கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வீடுகளை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 68 மேற்பட்ட ஹவுஸ் பிரேக்கிங் (வீடு உடைப்பு)  மற்றும் ராபரியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கொள்ளையை அரங்கேற்றிய இந்த கும்பல் விருதுநகரில் நான்கு கோடி ரூபாய்க்கு ஸ்பின்னிங் மில் வாங்கி  நடத்தி விஐபிக்களாக  சுற்றிவந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மூன்று மாதங்களாக நடைபெற்ற தீவிர தேர்தல் வேட்டைக்கு பிறகு இப்படிப்பட்ட ஒரு கும்பல் பிடிக்கப்பட்டுள்ளது. மூர்த்திக்கு ராட் மேன் என்ற பெயரும் உள்ளதாம். கொள்ளையடிக்க வீட்டின் கதவுகளை உடைக்க ராட் பயன்படுத்தியதால் மூர்த்திக்கு ராட் மேன் என பெயர் வந்துள்ளது என மூர்த்தியை கைது செய்துள்ள ராஜபாளையம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக  மேலும் பலரைத்  தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கூரை மீது வந்து விழும் கற்கள்; தூக்கமின்றி தவிக்கும் கிராமம்

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
 Stones falling on the roof; Villagers suffering from sleeplessness

திருப்பூரில் ஒரு கிராமத்தில் வீட்டு கூரையின் மீது திடீரென கற்கள் விழுந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் கோவிலில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் ஒட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாகவே இரவு நேரங்களில் வீட்டுக் கூரையின் மீது கற்கள் விழுந்து வருகிறது. இதனால் அச்சத்தில் உள்ள ஓட்டப்பாளையம் கிராம மக்கள் அருகில் உள்ள கருப்பராயன் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் தொடர்ந்து இந்தப் புகாரை தெரிவித்து வந்த நிலையில் முழுமையாக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ட்ரோன் கேமரா மூலமாகவும், கிரேன் உதவியுடனும் கண்காணிப்புகள் நடைபெற்று வருகிறது. திடீர் திடீரென வீட்டின் கூரைகளில் கற்கள் விழுவதால் உறக்கம் இல்லாமல் தவித்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.