Kid passes away who played in Theme park in salem

Advertisment

வெண்ணந்தூர் அருகே தனியார் தீம் பார்க்கில் குளித்த சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்தான்.

சேலம் எருமாபாளையத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவருடைய மகன் சர்வேஸ்வரன் (11). சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறை என்பதால் ரஞ்சித்குமார் குடும்பத்துடன் மே 11ம் தேதி காலை வெண்ணந்தூர் அருகே உள்ள ஒரு தனியார் தீம் பார்க்கிற்குச் சென்றார். அங்குள்ள குளத்தில் குடும்பத்தினர் அனைவரும் குதூகலமாக குளித்தனர். சிறுவன் சர்வேஸ்வரனும் குளத்தில் குளித்துவிட்டு, மேலே வந்தான். சில நிமிடத்தில் அவன் திடீரென்று மயங்கி கிழே விழுந்தான்.

இதைப் பார்த்த தீம் பார்க் ஊழியர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு, மல்லுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக கூறினர்.

Advertisment

உடற்கூராய்வுக்காக சிறுவனின் சடலம் அரசு மருத்துவமனையின் கூராய்வுக் கூடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெண்ணந்தூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.