Kid passed away near kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள சு.கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது மகன் வெற்றிவேல்(4). இந்நிலையில், சிறுவன் வெற்றிவேல், கடந்த 13ஆம் தேதி வீட்டிலிருந்துவிளையாடசென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.அரகண்டநல்லூர்காவல் நிலையத்தில் காசிலிங்கம் தனது மகன்வெற்றிவேலைகண்டுபிடித்துதருமாறு புகார் அளித்திருந்தார்.

Advertisment

அவரதுபுகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்தபோலீசார்தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று சு. கொல்லூர் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் வெற்றிவேல் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இதனைஅவ்வழியாகசென்றவர்கள் பார்த்து,போலீசாருக்குதகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குஅரகண்டநல்லூர்போலீசார்விரைந்து வந்தனர். மேலும் திருக்கோவிலூர்தீயணைப்புதுறையினருக்குதகவல் அளிக்கப்பட்டு அவர்களும் சம்பந்தப்பட்ட குளத்திற்கு விரைந்து வந்தனர்.

Advertisment

அதன்பிறகுசிறுவனின் உடலை மீட்ட காவல்துறையினர்,பிரேதப்பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் குளத்தில் தவறி விழுந்து இறந்து போனாரா அல்லது வேறு ஏதேனும் அவர்இறப்புக்குக்காரணமா? என்பது குறித்துபோலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.