
கடந்த 30ஆம் தேதி தற்காப்புக்கலை பயிற்சி ஆசிரியரானகெபிராஜை சென்னை அண்ணா நகர் மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். தற்காப்புக்கலை பயிற்சிக்கு வந்த பெண்ணுக்குப் பாலியல் தொல்லை தந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜ்மீது புகார் செய்துள்ள பெண், வேறு ஒரு மாநிலத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே இது தொடர்பாக விரிவான விசாரணை வேண்டும் என்ற நோக்கில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பாலியல் தொல்லை விவகாரம் என்பது நாமக்கல்லில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே பிற மாவட்டங்களில் விசாரணை நடத்த இருப்பதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow Us