கி.ரா. மீதான வன்கொடுமை வழக்கு ரத்து!- பெருமாள் முருகன் வழக்கை மேற்கோள்காட்டி உத்தரவு!

சாகித்ய அகடாமி விருதுபெற்ற பிரபல எழுத்தாளர் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன். இவருக்கு வயது 97 ஆகிறது. 2014-ல் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் ஆதிதிராவிடர்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார் என மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று கி.ரா. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ki raa based on judgement perumal murugan case

இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்‘மனுதாரர் கி.ரா. பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள பிரபல எழுத்தாளர் ஆவார். சமீபத்தில் அவரது மனைவி மரணம் அடைந்தார். கி.ரா.வும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கருத்துரிமை தொடர்பான வழக்குகளில் உத்தரவு பிறப்பிப்பதற்குமுன், பெருமாள் முருகன் வழக்கில் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பிறப்பித்த உத்தரவை நீதித்துறை நடுவர்கள் படித்துப் பார்க்க வேண்டும். கி.ரா. மீது வன்கொடுமை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வதற்கு போதிய முகாந்திரம் இல்லை. எனவே, கி.ரா. மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.’என்று உத்தரவிட்டுள்ளார்.

court madurai order Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe