Skip to main content

பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு!

Published on 14/08/2024 | Edited on 14/08/2024
Khushbu resigned from the post

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு கடந்த 2010ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக இணைந்து பணியாற்றினார். இதனையடுத்து அக்கட்சியில் இருந்து விலகி 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும் குஷ்புவிற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து குஷ்பு சிக்கினார்.

இந்நிலையில் குஷ்பு வகித்து வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவரின் ராஜினாமா கடிதத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக குஷ்பு கடந்த ஜூன் 28ஆம் தேதி தனது ராஜினாமா கடித்ததை துறை அதிகாரிக்கு அனுப்பியுள்ளார். அதன் மீதான நடவடிக்கையாக ஜூலை 30ஆம் தேதி  அவரது ராஜினாமா அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.