Kushboo

Advertisment

’உயிரினும் மேலான உடன் பிறப்புகளே’ என கோடிக்கணக்கான தொண்டர்களை பார்த்து பேசுவார் என காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் உடல்நலக்குறைவுக் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கலைஞரின் நலம் விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் தினமும் மருத்துவமனை வந்து செல்கின்றனர்.

கலைஞரின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை தகவல் வெளியிட்டும், இன்று 4வது நாளாக காவேரி மருத்துவமனை முன் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று தலைவா எழுந்து வா என்றும், கலைஞர் வாழ்க என்று கோஷம் எழுப்பியபடியே இருக்கின்றனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்நிலையில், கலைஞரின் நலம் வசாரிக்க காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பளர் குஷ்பு இன்று மருத்துவமனை வருகை தந்தார். அங்கு கலைஞரின் உடல்நலம் விசாரித்த பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கலைஞர் என்றைக்குமே ஒரு போராளியாக இருந்திருக்கிறார். இன்றும் அவர் ஒரு போராளியாக இருக்கிறார். கலைஞர் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருக்கிறது.

Advertisment

அவர் மீண்டும் பழைய படி திரும்ப வந்து ’உயிரினும் மேலான உடன் பிறப்புகளே’ என கோடிக்கணக்கான தொண்டர்களை பார்த்து பேசுவார் என்று நம்புகிறேன். காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் ரொம்ப நல்லபடியாக அவரை கவனித்து வருகிறார்கள். இவரைப் போன்ற தலைவர் நம் எல்லோருக்கும் தேவை என கூறினார்.