பிரச்சார ட்ரெண்டை பிடித்த குஷ்பு... 

Khushboo baked dosa in the campaign

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும்முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அண்மையில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த குஷ்புவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆயிரம் விளக்குத் தொகுதியில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் குஷ்பு. இந்நிலையில் இன்று (27.03.2021) ஆயிரம் விளக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட குஷ்பு, ஹோட்டல் ஒன்றில் தோசை சுட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அண்மைக்காலமாக பல்வேறு வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பின்போது துணி துவைத்துக்கொடுப்பது, பரோட்டா சுடுவது, மீன் வறுப்பது போன்ற நூதன முறையைப் பின்பற்றி வருகிறார்கள். அந்த வரிசையில் குஷ்புவும் அதே ட்ரெண்டை கடைபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

kushboo tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe