'KGF. Big mistake in the Tamil version of Chapter 2 '!

Advertisment

கடந்த 2018- ஆம் ஆண்டு, யாஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எஃப். சேப்டர் 1' திரைப்படம், இந்தியா முழுவதும் பிரமாண்ட வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்ட நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, 'கே.ஜி.எஃப். சேப்டர் 2 'வெளியீடு அடுத்தடுத்து தள்ளிப்போன நிலையில், தமிழ் புத்தாண்டு நாளான இன்று (14/04/2022) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் தமிழ்,கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

'கே.ஜி.எஃப். சேப்டர் 2' படம், பாகுபலி போன்று அழகிய தமிழில் வசனங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் என அனைத்துக் காட்சிகளும்மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும்கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், ஃபாக்ஸ் ஆபிஸில் ஆர்ஆர்ஆர்-யைப் பின்னுக்கு தள்ளி 'கே.ஜி.எஃப். சேப்டர் 2' அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், 'கே.ஜி.எஃப். சேப்டர் 2' படம் தமிழ் மொழியில் வெளியான நிலையில், அதன் தமிழ் பதிப்பில் பெரிய தவறு நிகழ்ந்துள்ளது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்கிரீனிங்கில் 'கே.ஜி.எஃப். சேப்டர் 2' என்பதற்கு பதிலாக 'கே.ஜி.எஃப். சப்டர் 2' என்று இருந்ததால், திரையரங்குகளில் இருந்தரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இந்த புகைப்படம் தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.