Advertisment

குட்கா விவாகரத்தில் திமுக சார்பில் கேவியட் மனு

குட்கா ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து தற்போது திமுக சார்பில்உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

குட்கா விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடும் என்பதால் இந்த கேவியட் மனுவை திமுக சார்பாக ஜே.அன்பழகன் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

court

கடந்தவாரம் குட்கா விவகாரம் தொடர்பாக திமுகவின் சார்பாக தொடுக்கப்பட்ட மனுவில் குட்கா தொடர்பான விசாரணையைமாநில அரசு கையாண்டால் நேர்மையான விசாரணை நடக்காது என அந்தமனுவில் கூறபட்டது. இந்த மனுவைவிசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

மேலும் தற்போது இந்த வழக்கில் தமிழக அரசோ அல்லது தனி நபரோ மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என்பதால் இந்த வழக்கில் மேல்முறையீடு அல்லது இடைக்கால தடை என எந்த நீதிமன்ற உத்தரவும் தங்களுடைய தரப்பை கேட்காமல் நீதிமன்றம் உத்தரவிடக்கூடாது என்பதன் நோக்கில் கேவியட் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

case gutka supremecourt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe