Advertisment

மசாஜ் சென்டரில் அதிர்ச்சி சம்பவம்; கேரளா வாலிபர் கைது - 2 பெண்கள் மீட்பு

Kerala youth arrested in massage center, 2 women rescued

Advertisment

ஈரோடு மாநகர் பகுதியில் மசாஜ் சென்டர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மசாஜ் சென்டர்களில் பெரும்பாலும் வட மாநில பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் சில மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் போலீசார் சமீப காலகமாக மசாஜ் சென்டர்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சில மசாஜ் சென்டரில் வேலை பார்க்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு வருகின்றனர். மேலும் மசாஜ் தொழில் ஈடுபடும் புரோக்கர்கள், உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஈரோடு நெரிக்கல்மேட்டில் ஒரு மசாஜ் சென்டர் இயங்கி வந்தது. இந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாழியல் தொழில் நடத்துவதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று இரவு அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். இதில், அங்கு 2 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பாலியல் தொழில் நடத்திய கேரளா மாநிலம் திருசூரை சேர்ந்த திலகன் மகன் நிகில் சிட்டி(28) என்பவரை போலீசார் கைது செய்து, அங்கு இருந்த 2 பெண்களை மீட்டு அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மசாஜ் சென்டர் உரிமையாளரான ரங்கநாயகி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Erode Women
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe