/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3364.jpg)
சென்னை அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் ஆன்லைனில் விஷம் ஆர்டர் செய்து அதன் மூலம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்துவந்தவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நிகில். இவர், பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்துவந்துள்ளார். இந்நிலையில் அவர், ஏற்கனவே வங்கி வைத்திருந்த விஷத் தன்மையுடைய பொருளை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். மேலும், சிறிது நேரம் கழித்து தனது விடுதியில் பக்கத்து அறையில் இருந்த தனது நண்பரான குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்திய சௌத்ரி என்பவருக்கு போன் செய்து தான் விஷம் அருந்திவிட்டதாக கூறியுள்ளார்.
இதனை கேட்ட ஆதித்திய சௌத்ரி பதறி அடித்துக்கொண்டு நிகில் அறைக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு நிகிலின் அறை கதவு உள்பக்கம் பூட்டி இருந்துள்ளது. அதனால், ஆதித்திய சௌத்ரி நிகில் அறையின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு நிகில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு விடுதியில் இருந்தவர்களின் உதவியுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு நிகிலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மறைமலைநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)