Advertisment

கேரளாவில் இருந்து சேலத்துக்கு லாரியில் தப்பிச் செல்ல முயன்ற 67 பேரை சுற்றி வளைத்த போலீசார்

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒரு மாவட்டத்தைத் தாண்டி இன்னொரு மாவட்டத்துக்குள் மக்களோ வாகனங்களோ நுழைய முடியாமல் கட்டுப்பாடு விதித்துள்ளது அரசு. இதில் அத்தியாவசியப் பொருட்களை மட்டும் கொண்டு செல்லும் வாகனங்களைச் சோதனைக்குப் பிறகே எல்லையைத் தாண்டி விடுகின்றனா்.

Advertisment

kerala to Salem

இந்த நிலையில் கேரளாவில் கண்ணூா் மாவட்டத்தில் கா்நாடகம், தமிழ்நாடு மாநிலங்கள் மற்றும் மலப்புரம் மாவட்டத்திற்குச் செல்லும் எல்லைகளை அந்த மாவட்ட நிர்வாகம் மார்ச் 24-ம் தேதி அடைத்தது. மேலும் ஊரடங்கு அறிவித்துள்ளதால் மாவட்ட எஸ்.பி. தலைமையில் போலீசார் மாவட்டம் முமுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனா்.

Advertisment

kerala to Salem

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

25-ம் தேதி மாலை பாயோழி இன்ஸ்பெக்டா் பிஜீ பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்தபோது சேலத்தில் இருந்து காய்கறிகள் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் காய்கறிகளை இறங்கி விட்டு தலச்சோரியில் இருந்து சேலத்துக்குச் சென்று கொண்டிருந்தது. அதை இன்ஸ்பெக்டா் பிஜீ சோதனை செய்த போது அந்த லாரியில் 67 போ் ஆண்களும் பெண்களும் இருந்தனா். அவா்களிடம் விசாரத்தபோது அத்தனை பேரும் சேலத்தைச் சோ்ந்தவா்கள் என்றும் கண்ணூரில் கூலி வேலை செய்து வருபவா்கள் என்றும் தற்போது கரோனா வைரஸ் பரவியிருப்பதால் சொந்த ஊருக்கு லாரியில் தப்பிச் செல்ல இருந்ததாகக் கூறியுள்ளனர்.

இதையடுத்து அவா்கள் 67 பேரையும் ஆா்டிஓ மற்றும் சுகாதாரத்துறையினா் இரண்டு கேரளா அரசு பேருந்துகளில் ஏற்றி தலடச்சோரியில் தனிமைப்படு்த்திபாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றனா். மேலும் ஊரடங்கு உள்ள 21 நாட்களும் அவா்களுக்கு அனைத்து தேவைகளையும் வசதிகளையம் செய்து கொடுப்பதாகக் கண்ணூா் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

police people lorry Salem Kerala corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe