கோவையில் கேரளா லாட்டரிகள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக சிங்காநல்லூர் போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காமாட்சி புரம் செக்போஸ்டில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் ஒருவர் 2,900 எண்ணிக்கையிலான கேரளா லாட்டரி சீட்டுகளை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பின்னர் நடத்திய விசாரணையில், அவர் திருச்செந்தூரைச் சேர்ந்த பிரபு(28) என்பதும், கோவையில் தொடர்ந்து கேரளா லாட்டரிகளை அவர் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.