style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கஜா புயலின் கோர தாண்டவத்தால் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சாலை வசதி, மின்னிணைப்பு வசதி, தகவல் தொடர்பு என முற்றிலும் துண்டித்துப்போன நிலையில் இப்போதுதான் சிறிது, சிறிதாக மீண்டுவருகிறது. பல்வேறு தரப்பினரும் தங்களாலான உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக அரசுக்கு ரூ.10 கோடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவு...
கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்கு கேரள மக்களின் ஆதரவை தெரிவிக்கிறோம். புதன் கிழமை அன்று, அமைச்சரவை அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு கொண்டோம். உணவு, துணி, ஆடைகள் உட்பட 14 லாரிகளில் அவசர பொருட்களை ஏற்கனவே அனுப்பி வைத்தோம்.
ஆறு மருத்துவ குழுக்களும், கேரளா மின்சார வாரியத்தை சேர்ந்த 72 ஊழியர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவை என்றால் மேலும் உதவியை அனுப்புவோம் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவாதம் அளித்தோம்.
கடந்த 27ம் தேதியன்று, நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தமிழ்நாட்டிற்கு உதவி செய்யுமாறு கேட்டுகடிதம் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. கேரள அரசின் இந்த அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கமல்ஹாசன்பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு...
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்கு கேரள முதல்வர் அவர்களுக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு!